2025-ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2025/2026 கல்வியாண்டிற்காகப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ள அனைத்து மாணவர்களும், இணையவழி ஊடாக மட்டுமே தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 2026 ஆம் ஆண்டு மே மாதம் 19-ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ugc.ac.lk என்ற முகவரிக்குச் சென்று விண்ணப்பிக்க முடியும்.
2025 உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ள மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
