10.1 C
Scarborough

இஸ்ரேல் – லெபனான் 10 நாள் போர்நிறுத்தம்!

Must read

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் நடத்திய ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் தமது ட்ரூத் சோஷியல் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த தற்காலிக போர்நிறுத்தம் கிழக்கு நேரப்படி (EST) இன்று மாலை 5 மணி முதல் அமுலுக்கு வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே நிரந்தர அமைதியை ஏற்படுத்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் கூட்டுப் படைத் தளபதி டான் கெய்ன் ஆகியோருக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இது, உலகளவில் தான் தீர்த்து வைக்கும் 10 ஆவது போர் என்றும், அமைதியை நிலைநாட்ட இது மிகமுக்கியமான நடவடிக்கை என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் லெபனானின் போர்நிறுத்தத்தில் ஹிஸ்புல்லாவும் இடம்பெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் மற்றும் லெபனான் ஜனாதிபதியை சந்திப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் எப்போது என்பதை அவர் குறிப்பிடவில்லை.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article