இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில், பஞ்சாபைச் சேர்ந்த 37 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு மிதவைப் பாலத்தில் மோதி பிருந்தாவன் யமுனை ஆற்றில் கவிழ்ந்தது.
நேற்று வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற இந்த படகு விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
படகு ஆற்றில் கவிழ்ந்ததைக் கண்ட அங்கிருந்தவர்கள் 2 படகுகளில் விரைந்து சென்று, தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில், பாதிக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஆனாலும் இந்த விபத்தில், 10 பேர் பரிதாபமாக பலியாகினர். 22 பேர் காயமடைந்தனர். மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளனர் என்று மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பிருந்தாவன் படகு விபத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

