ரத்து செய்யப்பட்ட Keystone XL எரிபொருள் குழாய் திட்டத்தின் சில பகுதிகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர South Bow நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் Mark Carney ஏற்கனவே அறிந்திருந்தார் என Reuters செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க அதிபர் Donald Trump-ஐ வெள்ளை மாளிகையில் சந்தித்த போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பதற்றத்தைத் தணிக்க Carney இத்திட்டத்தை முன்மொழிந்தார்.
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு அதிகப்படியான கச்சா எண்ணெயை கொண்டு செல்லும் நோக்கில், ஏற்கனவே கட்டப்பட்ட குழாய்களை விரிவாக்கம் செய்ய South Bow நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் கனேடிய அரசு நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், வரவிருக்கும் CUSMA வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் கனடாவின் எரிசக்தித் துறை முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது.
இதற்கிடையில், அமெரிக்காவின் Bridger Pipeline நிறுவனம், கனடா எல்லைக்கு அருகிலிருந்து சுமார் 550,000 பேரல் எண்ணெயைக் கொண்டு செல்லும் புதிய குழாய் திட்டத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது

