12.3 C
Scarborough

பாகிஸ்தானில் PhD ஆய்விற்காகச் சென்றிருந்த University of Toronto மாணவர் கைது

Must read

பாகிஸ்தானில் தனது முனைவர் பட்ட (PhD) ஆய்விற்காகச் சென்றிருந்த University of Toronto மாணவர் Hamza Ahmed Khan, அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கனடா மற்றும் பாகிஸ்தான் குடியுரிமை கொண்ட இவர், கடந்த டிசம்பர் மாதம் ஆய்வுப் பணிகளுக்காகப் பாகிஸ்தான் சென்றிருந்தார்.

கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயிருந்த இவர், தற்போது பாகிஸ்தானின் National Cyber Crime Investigation Agency (NCCIA) வசம் இருப்பதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராகத் தவறான தகவல்களைப் பரப்பியதாகவும், பொது அமைதியைக் குலைக்கும் வகையில் பதிவிட்டதாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர் அறிவுப்பூர்வமான விவாதங்களையே முன்னெடுத்ததாக அவரது சகோதரர் Awes Ahmed Khan தெரிவித்துள்ளார்.

தற்போது Lahore மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரை மீட்க, கனடா அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ள பிணை மனு மீதான விசாரணையைத் தொடர்ந்து மேலதிக விபரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article