கனடாவின் Alberta (அல்பெர்ட்டா) மற்றும் Quebec (கியூபெக்) மாகாணங்கள் அந்நாட்டை விட்டுப் பிரிந்து செல்வதை பெரும்பான்மையான மக்கள் எதிர்க்கின்றனர்.
Angus Reid Institute (ARI) அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பில், சுமார் 79 சதவீத கனடியர்கள் Alberta பிரிந்து செல்வதைத் தடுக்க விரும்புவதாகவும், 71 சதவீதம் பேர் Quebec பிரிந்து செல்வதை எதிர்ப்பதாகவும் தெரியவந்துள்ளது.
முக்கியமாக, Alberta மாகாணம் பிரிந்தால் நாட்டின் பொருளாதாரம், குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு துறை கடுமையாகப் பாதிக்கும் என 40 சதவீத மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், Alberta பிரிந்து சென்றால், அமெரிக்கா (U.S.) அந்த மாகாணத்தை ஒரு புதிய மாநிலமாக இணைக்க அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுக்கும் என 80 சதவீதத்தினர் நம்புகின்றனர்.
Premier Danielle Smith (பிரீமியர் டேனியல் ஸ்மித்) எதிர்வரும் அக்டோபரில் மாகாண உரிமைகள் தொடர்பான வாக்கெடுப்பை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
3,000 அதிகமான கனேடியர்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் Alberta பிரிவதற்கு எதிராக 79 சதவீதத்தினரும் Quebec பிரிவதற்கு எதிராக 71 சதவீதத்தினரும் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

