Tumbler Ridge துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரான Jesse Van Rootselaar என்பவரின் ChatGPT கணக்கை OpenAI நிறுவனம் 2025 இல் முடக்கியுள்ளது.
வன்முறை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் அந்த கணக்கு பயன்படுத்தப்பட்டதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், உடனடி உயிருக்கு ஆபத்தான அச்சுறுத்தல் இல்லாததால், அந்த நேரத்தில் இது குறித்து காவல்துறையிடம் (Law enforcement) முறைப்பாடு செய்யப்படவில்லை என நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்த பிறகு, தாமாகவே முன்வந்து RCMP (Royal Canadian Mounted Police) அதிகாரிகளுடன் தகவல்களைப் பகிர்ந்துள்ளதாகவும் OpenAI கூறியுள்ளது.
இது தவிர, Roblox விளையாட்டுத் தளத்திலும் வன்முறையைத் தூண்டியதற்காக இவர் தடை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், இணையதளங்களில் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த விடயங்களில் இவர் அதிக ஆர்வம் காட்டியதும், அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் விபரங்களைப் பார்வையிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

