கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி மழை காரணமாக, இன்று புதன்கிழமை (பெப்ரவரி 18, 2026) Toronto மற்றும் அதனைச் சூழவுள்ள GTHA பகுதிகளில் பாடசாலைப் பேருந்து சேவைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
வீதிகள் மிகவும் அபாயகரமான நிலையில் காணப்படுவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி TDSB, TCDSB, YRDSB, PDSB, DPCDSB மற்றும் Durham, Halton கல்விச் சபைகள் பேருந்து சேவைகளை ரத்து செய்துள்ளன.
இருப்பினும் இந்தப் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் வழமை போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுமுனையில், Hamilton-Wentworth District School Board (HWDSB) தனது பாடசாலைகளுக்கு முழுமையாக விடுமுறை அளித்துள்ளது.
ஆனால் HWCDSB பாடசாலைகள் திறந்திருக்கும், பேருந்துகள் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

