5.2 C
Scarborough

முதல் நகரம் நிலவில் – எலான் மஸ்க் உறுதி!

Must read

நிலவில் நகரம் அமைப்பது குறித்த தனது திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். செவ்வாய் கிரகத்தை விட, நிலவில் நகரம் உருவாக்குவது வேகமாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில்,

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்பை உருவாக்கும் இலக்குடன் செயல்பட்டு வந்தாலும், அதற்கு முன்னதாக நிலவில் ஒரு நகரத்தை உருவாக்குவது சாத்தியமானது. செவ்வாயை விட நிலவு பூமிக்கு மிகவும் அருகில் இருப்பதால், அங்கு அடிக்கடி விண்கலங்களை அனுப்ப முடியும்.

நிலவிற்கு செல்ல வெறும் 2 நாட்கள் மட்டுமே ஆகும். ஆனால் செவ்வாய் கிரகத்தை அடைய சுமார் 6 மாதங்கள் தேவைப்படுகிறது. இந்த நேர வித்தியாசம், செலவு மற்றும் தொழில்நுட்ப சவால்களை கணிசமாக குறைக்கிறது. அதனால் தொழில்நுட்ப ரீதியாக நிலவில் நகரம் உருவாக்குவது எளிதாகும். எதிர்வரும் 10 ஆண்டுகளுக்குள் நிலவில் ஒரு செயல்படும் நகரத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று் எலான் மஸ்க் தெரிவித்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article