2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை மதுவரி திணைக்களம் 120.5 பில்லியன் ரூபாய் வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது நிதி அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 102.6% வீதத்தை எட்டியுள்ளது.
திணைக்களத்தின் தகவலின் படி, இந்த எண்ணிக்கை குறிப்பிட்ட காலத்திற்கான வருவாய் இலக்கை விட அதிகமாக உள்ளது. இது வசூல் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
2023 ஆம் ஆண்டில், இலங்கை மதுவரித் திணைக்களம் அரசாங்கத்திற்கு ரூ. 226.7 பில்லியனை பங்களித்தது, இது 2022 இல் ரூ. 178.6 பில்லியனாகவும், 2021 இல் ரூ. 170.3 பில்லியனாகவும் காணப்பட்டது.