21 C
Scarborough

பாலியில் படகு விபத்து – நால்வர் பலி , 38 பேர் மாயம்!

Must read

இந்தோனேசியாவில் உள்ள பிரபல சுற்றுலா தலமான பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. படகில் 53 பயணிகள் இருந்துள்ளனர்.

விபத்து நடந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோரை மீட்டனர். இந்த விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 38 பேர் மாயமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் மாயமானவர்களை தீவிரமாக தேடி வருவதாக அதிகாரிகள் கூறினர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article