15.4 C
Scarborough

ரத யாத்திரையில் சிக்கி மூவர் உயிரிழப்பு

Must read

இந்தியாவின் ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் வருடாந்தோறும் நடைபெறும் 9 நாள் கொண்ட ரத யாத்திரை உலகப்புகழ் பெற்றதாகும். இந்த ஆண்டு ரத யாத்திரை நேற்று முன் தினம் தொடங்கியது.

இந்நிலையில், ஜெகநாதர் ரத யாத்திரை நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மீண்டும் தொடக்கியது.

ஜெகநாதர் கோவிலில் இருந்து 3 கிலோமீட்டர் தொலையில் உள்ள ஸ்ரீ கண்டிஜா கோவிலில் இருந்து ரத யாத்திரை தொடங்கியது. யாத்திரையை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அப்பகுதியில் குவிந்திருந்தனர்.

அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article