8.7 C
Scarborough

குரில் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Must read

ரஷ்யாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே குரில் தீவுகள் அமைந்துள்ள தீவின் கடல் பகுதியில் இன்று (14) அதிகாலை 12.05 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

குரில் தீவுகளில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 46.01 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 153.38 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article