15.4 C
Scarborough

டொரோண்டோவில் பல திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய ஒருவர் கைது

Must read

டொரோண்டோவில் உள்ள ப்ராட்வியூ அவென்யூ மற்றும் ஜெரார்ட் ஸ்ட்ரீட் ஈஸ்ட் பகுதிகளில் நடந்த பல வீட்டுப் புகுந்து திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முதல் சம்பவம் மார்ச் 4ஆம் தேதி அதிகாலை 3:00 மணியளவில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர், வீட்டின் பின்புற கதவை திறந்து உள்ளே புகுந்து, குடியிருந்த ஒருவரை கத்தியால் மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் எந்த பொருளையும் கொள்ளையடிக்காமல் தப்பி சென்றுள்ளார்.

விசாரணையில், குறித்த நபர் மேலும் மூன்று சம்பவங்களில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், ஒரு வீட்டின் கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தியதும், இன்னொரு வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருடியதும் அடங்கும்.

மேலும், அந்த நபர் மற்றொரு வீட்டில் அச்சுறுத்தும் செய்தி கொண்ட ஒரு குறிப்பு எழுதி விட்டுச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

30 வயதுடைய ஈயன் டிக்சன் (Eian Dickson) என்பவர், கொள்ளை, மிரட்டல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article