கனடாவின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளின் அதிகாரத்தை அதிகரிப்பது குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லிபிலான்க் மற்றும் அவரது அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதன்படி அதிகாரிகளுக்கு புதிய பாதுகாப்பு கருவிகள் வழங்கப்பட உள்ளதுடன், கனடிய எல்லை பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்து ஆராயப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு, எல்லைப் பாதுகாப்பு விவகாரம் காரணமாக அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் எச்சரிக்கையை வெளியிட்டிருந்தார்.
இதனை கருத்தில் கொண்டே எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க கனடிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.