5.6 C
Scarborough

நயன்தாரா – கவின் இணையும் ‘ஹாய்’- வைரலாகும் ‘கன்னக்குழியா’ பாடல்!

Must read

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதல்முறையாக இணைந்து நடிக்கும் ‘ஹாய்’ (HI) திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘டாடா’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கவின் நடிக்கும் இந்தப் திரைப்படத்தின் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் பிரபு, பாக்யராஜ், ராதிகா மற்றும் கருணாஸ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.

லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஷ்ணு எடவன் இந்த படத்தை இயக்குகிறார்.படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் பாடியுள்ள ‘கன்னக்குழியா’ (Kannakkuzhiya) எனும் மெல்லிசைப் பாடல் இன்று வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ மற்றும் ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளன.

வித்தியாசமான கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஹாய்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்பாடல் வெளியீட்டிற்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article