இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 47 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணியின் சார்பில் நிக்கோலஸ் பூரன் 63 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில் 229 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
