இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குறைந்தது 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (22) மாலை சுமார் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ‘திருச்சூர் பூரம்’ திருவிழாவிற்கான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது முதல் வெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விளைநிலங்களுக்கு மத்தியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகளில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிய நிலையில், முதல் வெடிப்பைத் தொடர்ந்து தொடர்ச்சியான பல வெடிப்புகள் ஏற்பட்டன.
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததுடன், 5 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

