12.3 C
Scarborough

அதிக விலைக்கு அரிசி, குடிநீர் விற்பனை – கடைகள் முற்றுகை!

Must read

அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு அரிசி மற்றும் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை  அதிரடியாக முற்றுகையிட்டுள்ளது.

கடந்த 24-ம் திகதி கண்டி, திருகோணமலை, காலி, தங்காலை, கிராந்துருகோட்டை மற்றும் அப்புத்தளை ஆகிய பகுதிகளில் இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளை அதிக விலைக்கு விற்ற வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த குற்றத்திற்காக பின்வரும் வர்த்தகர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த குற்றத்திற்காக திருகோணமலை மற்றும்  கிராந்துருகோட்டை ஒரு வர்த்தகரும், காலி மற்றும் தங்காலையில் தலா 02 வர்த்தகர்களுமாக 06 வர்த்தகர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அப்புத்தளை பகுதியில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.

அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கும் பாரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அப்புத்தளையில் குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்ற வர்த்தகர் ஒருவருக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, அனுராதபுரம் பகுதியில் குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்ற வர்த்தகருக்கு 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களைச் சுரண்டும் வகையில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக இத்தகைய சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரித்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article