8.4 C
Scarborough

இன்ஸ்டாகிராமையே அதிர வைத்த இளைஞன்!

Must read

எத்தியோப்பியாவைச் சேர்ந்த 21 வயது இளம் ஆடை வடிவமைப்பாளரான Kalu Putic, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 21 பதிவுகளை மட்டுமே வெளியிட்டு 2.7 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களை (Followers) பெற்றுள்ளார்.

வழக்கமான ஆடைகளுக்குப் பதிலாக, காலணி (Shoe) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களைக் கொண்டு இவர் ஆடை வடிவமைக்கிறார்.

இவர் தயாரிக்கும் ஆடைகளின் ரீல்ஸ் (Reels) காணொளிகள் பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பல முன்னணி ஆடை நிறுவனங்கள் இவரைத் தொடர்பு கொள்ள முயன்றும், அவற்றிற்கு இவர் இதுவரை பதிலளிக்கவில்லை.

சமூக வலைதள நிறுவனமான இன்ஸ்டாகிராம் உத்தியோகபூர்வமாகத் தொடர்பு கொண்டும், அவற்றையும் இவர் கண்டுகொள்ளாமல் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைதளங்களின் கவனத்தை ஈர்க்கும் பல கிரியேட்டர்கள் மத்தியில், விளம்பரங்களுக்கும் பிரபலங்களுக்கும் முக்கியத்துவம் தராமல், தனது கலை மற்றும் வடிவமைப்புப் பணிகளில் மட்டுமே இவர் கவனம் செலுத்தி வருவது இணையவாசிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article