ஸ்கார்பரோவில் (Scarborough) புதன்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில், பெண் ஒருவர் வாகனம் மோதி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 7:45 மணி அளவில், பார்மசி அவென்யூ (Pharmacy Avenue) மற்றும் செயின்ட் கிளேர் அவென்யூ ஈஸ்ட் (St. Clair Avenue East) சந்திப்பில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ரொறன்ரோ (Toronto) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த பெண்ணின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், அவர் உடனடியாக அதிதீவிர சிகிச்சை மையத்திற்கு (Trauma Centre) கொண்டு செல்லப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தில் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து காரணமாக, பார்மசி அவென்யூவின் டோரின் (Dorine) மற்றும் ரோசிட்டா க்ரெசென்ட்ஸ் (Rosita Crescents) இடையிலான பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

