10.4 C
Scarborough

கனடாவின் சர்வதேச மாணவர்களுக்கு விசேட சலுகைகள்

Must read

மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள சர்வதேச மாணவர்களுக்கு உதவும் வகையில், கனடாவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் பல்வேறு விசேட சலுகைகளை அறிவித்துள்ளன.

இதன்படி பல்கலைக்கழகங்கள் கல்விக் கட்டணம் செலுத்துவதற்கான கால நீடிப்பு, பரீட்சைகளை ஒத்திவைக்கும் வசதி மற்றும் அவசர நிதி உதவிகள் போன்ற சலுகைகளை வழங்க முன்வந்துள்ளன.

போரின் விளைவாக குடும்பத்தினரை அல்லது நிதி ஆதாரங்களை இழந்த மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பரீட்சைகள் மற்றும் பாடப்பணிகளுக்கான காலக்கெடுவை நீட்டிக்கும் சலுகைகளை வழங்கியுள்ளன.

அத்துடன், போரால் மனஅழுத்தம் அனுபவிக்கும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் மற்றும் ஆதரவு சேவைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

 

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article