உலக அரங்கில் அமெரிக்கா ஏனைய நாடுகளுடன் கொண்டுள்ள உறவுகளைப் பொறுத்தவரை, அந்த நாடு தனது செயற்பாடுகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரவை அமைச்சர் Chrystia Freeland கூறுகிறார்.
2025-ஆம் ஆண்டு பதவியேற்றது முதல், அமெரிக்க அதிபர் Donald Trump, கனடா உள்ளிட்ட பல நாடுகளை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக கூறி வருவதுடன், பொருட்களின் மீது வரிகளையும் விதித்து அச்சுறுத்தி வருகிறார். இது ஒரு தொடர்ச்சியான வர்த்தகப் போரை உருவாக்கியுள்ளது.
பிரதமர் Mark Carney அண்மையில் World Economic Forum மாநாட்டில் தெரிவித்த கருத்து தொடர்பில் Freeland கூறும்போது, இது ஒரு மிகச்சிறந்த உரை என்று குறிப்பிட்டதுடன், அமெரிக்கா தனது செயற்பாடுகளைச் சீர்செய்யவில்லை என்றால் உலகம் இன்னும் ஏழ்மையான நிலைக்குத் தள்ளப்படும் என்றும் கூறினார்.
மேலும், சீனா போன்ற ஆதிக்க சக்திகளை உலக நாடுகள் சார்ந்திருக்கும் பட்சத்தில், மனித உரிமைகளும் ஜனநாயகமும் முக்கியத்துவத்தை இழந்துவிடும் என்றும் அவர் எச்சரித்தார். ஏனெனில் “சீனாவைச் சார்ந்திருக்க வேண்டிய ஒரு உலகம் உருவாகுமானால், அங்கே மனித உரிமைகளுக்கு மதிப்பிருக்காது, ஜனநாயகத்திற்கும் இடமிருக்காது,” என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா உண்மையிலேயே ஒரு சிறந்த நாடு என்று கூறிய முன்னாள் அமைச்சர் Freeland, அமெரிக்காவுடன் சரியான உறவை பேண கனடா முயற்சிக்க வேண்டும் என்ற தொனியில் கருத்து வெளியிட்டார்.

