17.8 C
Scarborough

பீபா உலகக் கிண்ண திருவிழா ஆரம்பம் – 2026!

Must read

கால்பந்தாட்ட ரசிகர்கள் பலரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டம் 2026, மிகப் பிரம்மாண்டமாக இன்று முதல் ஜூலை 19 ஆம் திகதி வரை மெக்ஸிக்கோ, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.

மெக்ஸிக்கோவுக்கும் தென் ஆபிரிக்காக்கும் இடையிலான முதல் போட்டி, மெக்ஸிக்கோ சிட்டி அரங்கில் ஆரம்பமாகும் பீபா உலகக் கிண்ணத் தொடரானது, அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறும் இறுதிப் போட்டியுடன் நிறைவடையும். மெக்ஸிக்கோவில் இன்று நடைபெறும் முதலாவது போட்டி இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30 க்கு ஆரம்பமாகும்.

23 ஆவது பீபா உலகக் கிண்ணமானது, இம்முறை வட அமெரிக்க கண்டத்தில் நடைபெறுவதால் இலங்கைக்கு சுமார் 12 மணித்தியால நேர இடைவெளி காணப்படுகிறது.

ஆகவே, இலங்கை நேரப்படி நள்ளிரவைத் தாண்டியும், அதிகாலை மற்றும் காலை வேளைகளிலேயே போட்டிகள் ஆரம்பமாகும் என்பது கவனிக்கத்தக்கது.

இலங்கை செய்திகள்

48 அணிகள் பங்கேற்பு

பீபா கால்பந்தாட்ட உலகக் கிண்ண வரலாற்றில் 48 அணிகள் விளையாடுவது இதுவே முதல் தடவையாகும். இதன்படி, தலா 4 அணிகள் 12 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடும்.

முதல் சுற்றான லீக் சுற்றில் 72 போட்டிகளும், அடுத்து வரும் நொக் அவுட் சுற்றுகள், காலிறுதி, அரையிறுதி, உலகக் கிண்ண சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி அடங்கலாக 32

போட்டிகள் விளையாடப்படவுள்ளன. இவ்வாறு மொத்தமாக 104 போட்டிகள் மெக்ஸிக்கோ, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் 16 நகரங்களில் நடத்த ஏற்பாடாகியுள்ளன.

முதல் தடவையாக 4 அணிகள்

பீபா உலகக் கிண்ண வரலாற்றில் 4 அணிகள் முதல் தடவையாக தடம் பதிக்கின்றன. இதில் ஆபிரிக்க தீவு நாடான கேப் வெர்டே, கரீபியத் தீவு நாடான குராக்கவோ, உஸ்பெகிஸ்தான் மற்றும் ஜோர்தான் ஆகிய இரண்டு ஆசிய நாடுகள் முதல் முறையாக தகுதி பெற்றுள்ளன.

மெக்ஸிக்கோவுக்கு சிறப்பு

Beaches & Islands

2026பீபா உலகக் கிண்ணத்தை மெக்ஸிக்வோவும் இணைந்து நடத்துகிறது. பீபா உலகக் கிண்ணத் தொடரை மூன்றாவது தடவையாக நடத்துவதால், அதிக தடவைகள் பீபா உலகக் கிண்ணத்தை நடத்தும் நாடு என்ற சிறப்பை மெக்ஸிக்கோ பெற்றுக்கொண்டது. இதற்கு முன்னர் 1970 மற்றும் 1986 இல் மெக்ஸிக்கோ போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இம்முறை அமெரிக்கா இரண்டாவது தடவையாகவும் கனடா முதல் தடவையாக நடத்துகிறது.

வரலாறு

1930 இல் நடைபெற்ற முதலாவது உலகக் கிண்ண்தை உருகுவே கைப்பற்றியிருந்தது. 1930 இல் முதல் 2022 வரையான 22 தடவைகள் நடைபெற்றுள்ள பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் 5 தடவைகள் உலக சம்பியன் பட்டம் வென்ற பிரேஸில், அதிக தடவை சம்பியனான அணியாக திகழ்கிறது.

இத்தாலி மற்றும் ஜேர்மனி ஆகியன தலா 4 தடவைகளும் நடப்பு சம்பியனாகத் திகழும் ஆர்ஜென்டீனா 3 தடவைகளும் உலக சம்பியனா முடிசூடியுள்ளன. உருகுவே, பிரான்ஸ் ஆகிய தலா 2 தடவைகளும், இ 22 ங்கிலாந்து, ஸ்பெய்ன் ஆகிய தலா ஒரு தடவையு 2 ம் உலக சம்பியன் பட்டத்தை வென்றிருந்தன.

இதன்படி, பிரேஸில், ஆர்ஜென்டீனா, உருகுவே ஆகிய தென் 22 அமெரிக்க கண்ட நாடுகள் 10 தடவைகளும், இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், இ 22 ங்கிலாந்து, ஸ்பெய்ன் ஆகிய ஐரோப்பிய நாடுகள் 12 தடவைகளும் உலக சம்பியன் கிண்ணத்தை தம்வசப்படுதிக்கொண்டுள்ளன.

200 க்கு அதிக நாடுகள் விளையாடும் கால்பந்தாட்டத்தில் 8 நாடுகள் மாத்திரமே உலக சம்பியன் மகுடத்தை சூடியுள்ளமை கவனிக்கத்தக்க விடயமாகும்.

யாருக்கு வாய்ப்பு?

கால்பந்தாட்ட உலகின் கால்பந்தாட்ட ஜாம்பவான்களாக விள 2 ங்கும் ஆர்ஜென்டீனாவின் லயனொல் மெஸி, போர்துக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரேஸிலன் நெய்மர் ஆகியோரின் கடைசி உலகக்கிண்ணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த முறை ஆர்ஜென்டீனா அணி சம்பியனாகி மெஸியின் உலகக் கிண்ண கனவை நனவாக்கியிருந்தனர். அதுபோல், இம்முறை கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கனவை நனவாக்குவதற்கு, குறிப்பாக போர்த்துக்கல் அணியை முதல் தடவையாக உலக சம்பியனாக்குவதற்கு போர்த்துக்கல் வீரர்கள் உறுதிபூண்டுள்ளனர்.

இதுபோல், ஸ்பெய்ன், பிரேஸில், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி ஆகியனவும், போட்டி நடத்தும் மெக்ஸிக்கோவும் உலகக் கிண்ணத்தை வெல்வதற்கான போட்டியில் உள்ளன.

மேலும், மொரோக்கோ, குரேஷியா, நெதர்லாந்து, பெல்ஜியம் போன்றனவும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கான போட்டியில் களமிறங்கியுள்ளன.

முன்னாள் சம்பியனான இத்தாலி இம்முறை உலகக் கிண்ணத்தில் தகுதி பெறாதமை அவ்வணி ரசிகர்களுக்கு வருத்தமளிக்கும் செய்தியாகும்.

பரிசுத் தொகை

இம்முறை பீபா 871 மில்லியன் அமெரிக்க டொலரை பணப்பரிசாக வழ 22 ங்குகிறது. இதில் உலக சம்பியனாக முடிசூடு 2 ம் அணிக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலரும், உபசம்பியனாகும் அணிக்கு 33 மில்லியன் அமெரிக்க டொலரும் வழ 22 ங்கப்படும். அமெரிக்க டொலரில் மூன்றாமிடம் பெறும் அணிக்கு 29 மில்லியனும், நான்காமிடம் பெறும் அணிக்கும் 27 மில்லியனும் வழ 2 ங்கப்படும்.

5 முதல் 8 ஆம் இட 2 ங்களில் நிறைவு செய்யும் அணிக்கு தலா 19 மில்லியன் டொலர்களும், 9 முதல் 16 ஆம் இடங்களில் நிறைவு செய்யும் அணிக்கு தலா 15 மில்லியன் டொலரும் 17 முதல் 32 ஆம் இட 2 ங்களில் நிறைவு செய்யும் அணிக்கு தலா 11 மில்லியன் டொலரும் முதல் சுற்றுடன் வெளியேறும் அணிக்கு தலா 10 மில்லியன் டொலரும், தனிப்பட்ட விருதுகளுக்கும் பணப்பரிசு வழங்குவதாக பீபா அறிவித்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article