5.5 C
Scarborough

கனடியர்களுக்கு விசா விலக்கு அறிவித்தது சீனா!

Must read

சீனா (China) அரசு, கனடிய சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொழில் நோக்கில் பயணம் செய்பவர்களுக்கு 30 நாள் வரை விசா தேவையை நீக்குவதாக அறிவித்துள்ளது. இந்த நடைமுறை செவ்வாய்க்கிழமை முதல் இந்த ஆண்டு இறுதி வரை அமலில் இருக்கும் என சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் Beijing-க்கு சென்ற கனடா பிரதமர் Mark Carney, சீன அதிபர் Xi Jinping உடன் சந்திப்பு நடத்தினார். அப்போது விசா விலக்கு குறித்து உறுதி அளிக்கப்பட்டதாக Carney கூறியிருந்தார். தற்போது அதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுவரை, கனடியர்கள் Mainland China செல்ல நீண்ட விண்ணப்ப செயல்முறை மற்றும் சுமார் $140 கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் Hong Kong, Macau, Hainan பகுதிகளுக்கு ஏற்கனவே விசா இல்லாமல் செல்ல முடிந்தது.

Vancouver- பகுதியை தளமாக கொண்ட Happy Times Travel and Tour Ltd. நிறுவனத் தலைவர் Glynnis Chan, இந்த அறிவிப்பை தனது வாடிக்கையாளர்கள் வரவேற்றுள்ளதாக கூறினார். நீண்ட மற்றும் சிக்கலான விண்ணப்ப நடைமுறை காரணமாக பலருக்கு சீனாவில் உள்ள உறவினர்களைச் சந்திப்பது கடினமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் Formosa Travel Ltd. நிறுவன உரிமையாளர் Margaret Liu, இந்த மாற்றம் நல்ல முன்னேற்றம் என்றாலும் உடனடியாக பெரிய அளவில் கனடியர்கள் சீனா China செல்ல வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்டார். விமானச்சீட்டு, தங்குமிடம் மற்றும் பயணச் செலவுகள் அதிகமாக இருப்பது ஒரு காரணம் என அவர் கூறினார்.

2023 ஆகஸ்டில் China பல நாடுகளுக்கான குழு சுற்றுலா தடையை நீக்கியிருந்தாலும், Canada மீது இருந்த கட்டுப்பாடுகளை கடந்த நவம்பரில் தான் நீக்கியது. கடந்த மாதம் Beijing-ல் கையெழுத்தான ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளும் சுற்றுலா மேம்பாட்டிற்காக இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளன. இதில் 2026 FIFA World Cup உள்ளிட்ட நிகழ்வுகளும் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article