திருகோணமலை, கந்தளாயில் பாடசாலையொன்றில் இன்று (11) வியாழக்கிழமை வழங்கப்பட்ட போஷாக்கு உணவு ஒவ்வாமை காரணமாக 19 மாணவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஊட்டச்சத்துத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவினை உற்கொண்டபோது, ஒவ்வாமை ஏற்பட்டதனால் கந்தளாய் வைத்தியசாலையின் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுடன் அன்னாசிப்பழத்துண்டுகளும் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாவட்டத்தின் மற்றுமொரு பாடசாலையான மஹதிவுல்வெவ பாடசாலையில், புதன்கிழமை (10) வழங்கப்பட்ட உணவை அருந்திய 20 மாணவர்கள், உணவு ஒவ்வாமை காரணமாக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இவ்மாணவர்களுக்கு பசும்பால் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
