தெற்கு ஒன்டாரியோ பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருவதால், Environment Canada, பெம்ப்ரோக் முதல் விண்சர் வரை உள்ள பகுதிகளுக்கு குளிர் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றின் தாக்கத்தால் வெப்பநிலை -35°C வரை குறையக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டொரோண்டோ பெருநகரப் பகுதியில் இந்த கடும் குளிர் ஏற்கனவே தாக்கம் செலுத்தி வரும் நிலையில், இன்று இரவும் ஞாயிற்றுக்கிழமையும் தொடரும் என முன்னறிவிப்பு கூறுகிறது. மேலும் 70–80 கி.மீ./மணி வேகத்தில் காற்று வீசுவதால் பனிப்பொழிவு ஏற்படும் என்றும் அதனால் தூரப் பகுதிகளை பார்ப்பது கடினமாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேக் ஹ்யூரான் கரையோரம், லண்டன் நகரத்தின் வடமேற்கு பகுதிகள் மற்றும் அமெரிக்க எல்லை அருகே உள்ள இடங்களுக்கு ஆரஞ்சு பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 15 செ.மீ. பனி பெய்யக்கூடும்.
இந்த கடும் குளிர் நிலை மத்திய மற்றும் வடகிழக்கு ஒன்டாரியோவின் பெரும் பகுதிகளையும் பாதிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

