5.3 C
Scarborough

ஐரோப்பாவுடன் இணைகிறதா கனடா?

Must read

உலகத் தலைவர்களுடன் வர்த்தக உறவுகள் மற்றும் ஏனைய புவிசார் அரசியல் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பிரதமர் Mark Carney இந்த வாரம் ஐக்கிய இராச்சியத்திற்கு பயணமாகிறார்.

September 25 முதல் 28 வரை Carney லண்டனில் இருப்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்போது அவர் இங்கிலாந்து பிரதமர் Keir Starmer மற்றும் Iceland, Australia, Spain, Denmark நாடுகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.

சர்வதேச நட்பு நாடுகளுடன் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, வணிகத் தலைவர்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களுடனும் அவர் சந்திப்புக்களை நடத்துவார் என்று அவரது அலுவலகம் கூறுகிறது.

அமெரிக்கா பாதுகாப்புவாத வரிக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டதற்கு பதிலளிக்கும் விதமாக, Carney யும் அவரது அமைச்சர்களும் பதவிக்கு வந்ததிலிருந்து கனடாவின் சர்வதேச உறவுகளை குறிப்பாக ஐரோப்பாவுடனான உறவை பலப்படுத்த முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

New York  இல் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான தனது பயணத்தை இன்றைய தினம் நிறைவு செய்யும் பிரதமர், கடந்த வாரம் வட அமெரிக்க நட்பு நாடான Mexico உடன் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள Mexico சென்றிருந்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article