10.6 C
Scarborough

எச்.ஐ.வி தொற்றிலிருந்து குணமடைந்த நபர்!

Must read

கனடாவின் டொராண்டோவில் 27 ஆண்டுகளாக எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர், வரலாற்றில் இந்த நோயிலிருந்து குணமடைந்த 11ஆவது நபராக மாற வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவருக்கு மேற்கொள்ளப்பட்ட என்பு மச்சை மாற்று அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்துகள் (ART) நிறுத்தப்பட்டன.

அதன் பின்னரான சோதனைகளில் அவரது உடலில் வைரஸ் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை.

இருப்பினும், எச்.ஐ.வி வைரஸ்கள் உடலில் மறைந்திருந்து மீண்டும் தாக்கக்கூடும் என்பதால், இது இன்னும் முழுமையான குணமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மேலும், என்பு மச்சை மாற்று சிகிச்சை என்பது மிகவும் சிக்கலானது மற்றும் உயிருக்கு ஆபத்தான சிகிச்சை முறையாக இருப்பதால், இதனை அனைத்து நோயாளிகளுக்கும் பொதுவான தீர்வாகப் பயன்படுத்த முடியாது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article