5.6 C
Scarborough

அல்பர்ட்டா பிரிய வேண்டுமென்பது பெரும் துரோகம் – முன்னாள் பிரதமர்!

Must read

கனடாவிலிருந்து அல்பர்ட்டா மாகாணம் தனியாகப் பிரிந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக, ஆளும் கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திடுவது “மிகப்பெரிய துரோகம்” என முன்னாள் பிரதமர் ஜேசன் கென்னி (Jason Kenney) கடுமையாகச் சாடியுள்ளார்.

அல்பர்ட்டா மாகாணத்தைச் சுதந்திர நாடாக்கக் கோரி ‘ஸ்டே ஃப்ரீ ஆல்பர்ட்டா’ (Stay Free Alberta) என்ற அமைப்பு ஒரு பொதுமனுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இந்தப் பிரிவினைவாத மனுவில் தற்போதைய அல்பர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித்தின் (Danielle Smith) கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களே கையெழுத்திட்டுள்ளதாக அந்த அமைப்பின் வழக்கறிஞர் ஜெஃப் ராத் (Jeff Rath) தெரிவித்துள்ளார்.

இது குறித்து, எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்த அல்பர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித் “தனது கட்சி உறுப்பினர்கள் எந்த மனுவில் வேண்டுமானாலும் கையெழுத்திடுவதற்கு அவர்களுக்குச் சுதந்திரம் உண்டு எனவும் தான் அவர்களைக் கண்காணிக்க மாட்டேன்” எனவும் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஸ்மித்தின் கருத்துக்குப் பதிலடி கொடுத்துள்ள முன்னாள் பிரதமர் ஜேசன் கென்னி ”யுனைடெட் கன்சர்வேடிவ் கட்சி (UCP) ஒரு ஐக்கிய கனடாவிற்குள் ஆல்பர்ட்டா வலிமையாக இருக்க வேண்டும் என்ற கொள்கையில்தான் உருவாக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article