17.6 C
Scarborough

அமெரிக்கா விதிக்கும் வரிகளை சமாளிக்க கனடா புதிய சட்டம்! மார்க் கார்னி அதிரடி

Must read

உள்நாட்டு வர்த்தக தடைகளை நீக்குவதன் மூலம் அமெரிக்க விதிக்கும் வரிகளை சமாளிக்கும் வகையில் கனடா அரசு புதிய முயற்சியை எடுக்கவுள்ளது.

கனடா உள்நாட்டில் முழுமையான வர்த்தக சுதந்திரத்தை ஏற்படுத்த ஜூலை 1-க்குள் சட்டம் கொண்டு வரவுள்ளது என்று பிரதமர் மார்க் கார்னி அறிவித்தார்.

இதன் மூலம், அமெரிக்காவின் கடுமையான வரிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை சமாளிக்கலாம் என அவர் கூறினார்.

உள்நாட்டு வர்த்தக தடைகளை நீக்கும் முயற்சி

கனடாவில் 10 மாகாணங்கள், 3 பிரதேசங்களில் மாறுபட்ட வர்த்தக விதிகள் உள்ளன. இதனால் பணிகள் தாமதம் ஆகின்றன.

கார்னியின் திட்டம் மூன்று முக்கிய வழிகளில் செயல்படும்:

ஒன்றிய மாகாண விதிகளை ஒரே மாதிரியாக்குதல் ஒரு மாகாணம் மற்றொரு மாகாண விதிகளை ஏற்கும் முறைமை தேசிய அளவில் ஒரே விதிகளை உருவாக்குதல் கார்னியின் ஆய்வின்படி, உள்நாட்டு வர்த்தக தடைகளை நீக்குவதால் 15% வர்த்தக செலவுகள் குறைந்து, 4% முதல் 8% வரை பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

பிரித்தானியர்., கடைசி ஆசையை நிறைவேற்றிய உறவுகள்
அமெரிக்க வரிகள் – கனடாவின் நடவடிக்கை கனடாவின் இரும்பு, அலுமினிய இறக்குமதிக்கு அமெரிக்கா 25% வரி விதித்துள்ளது. மேலும் ஏப்ரல் 2-ஆம் திகதி கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்க பல உடனடி திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article