2025 பெப்ரவரி 17ஆம் திகதி, Toronto Pearson Airport-இல் தரையிறங்கும் போது Delta Air Lines Flight 4819, (Endeavor Air இயக்கிய Bombardier CRJ-900) கடுமையாக தரையைத் தாக்கி கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது.
Minneapolis-இல் இருந்து வந்த இந்த விமானத்தில் இருந்த 76 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் உட்பட அனைவரும் உயிர் தப்பினர். எனினும் 21 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்.
இதில் பாதிக்கப்பட்ட பயணிகளில் ஒருவரான John Nelson (Minnesota), அனுபவங்களை பகிர்ந்துகொண்ட போது, “விமானம் தரையை பலத்த வேகத்தில் மோதியது; நாங்கள் தலைகீழாக தொங்கினோம், எரிபொருள் வாசனை, தீப்பற்றல் அந்த தருணம் இன்னும் மனதில் இருந்து போகவில்லை” என தெரிவித்தார்.
இந்த விபத்தினால் ஏற்பட்ட கண் காயம், கழுத்து மற்றும் முதுகு காயங்கள் காரணமாக அவரது வாழ்க்கயே முழுமையாக மாறிவிட்டதாக கூறினார்.
மற்றொரு பயணி Nate Richie (Cape Coral, Florida), தலையில் அடிபட்டு மூளை காயம், நினைவிழப்பு, மனஅழுத்தம் ஆகியவற்றால் அவதிப்படுகிறார். “அந்த நாள் எனது கடைசி நாள் என்று நினைத்தேன்” என அவர் கூறினார்.
விபத்துக்குப் பிறகு Delta நிறுவனம் US$30,000 இழப்பீடு வழங்கியிருந்தாலும், பலர் அது போதாது எனக் கூறி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
வழக்கறிஞர் Erin Applebaum (New York), இந்த விபத்து “100% தவிர்த்திருக்ககூடியது” என குற்றம் சாட்டுகிறார்.
Transportation Safety Board of Canada (TSB) இறுதி அறிக்கைக்காக முன்னெடுக்கும் விசாரணைகள் தொடர்கிறது. ஆனால் காரணம் இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.
ஒரு வருடம் கடந்தும், இந்த விபத்து பயணிகளின் உடல் மற்றும் மனநலத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளமை கவலைக்கிடமானதாகும்.

