5.6 C
Scarborough

NDP பிரதித்தலைவர் டோலி பேகம் பதவி விலகல்!

Must read

முன்னாள் மத்திய அமைச்சரும், Toronto தொகுதியின் Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான Bill Blair, UK மற்றும் Northern Ireland இற்கான கனடாவின் உயர் ஸ்தானிகராக பொறுப்பேற்பதற்காக தனது பதவியை இராஜினாமா செய்கிறார்.

அந்த இடத்தைப் பிடிக்கும் முயற்சியில், கனடா Liberal கட்சியின் சார்பில் மத்திய தேர்தலில் போட்டியிடுவதற்காக, Scarborough Southwest தொகுதியின் மாகாணசபை உறுப்பினராக இருக்கும் Ontario, NDP கட்சியின் பிரதித்தலைவர் Doly Begum, தனது பதவியை இராஜினாமா செய்கிறார்.

​”Doly இன் சேவைக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன், அவர் நலமுடன் இருக்க வாழ்த்துகிறேன்,” என்று Ontario NDP தலைவர் Marit Stiles செவ்வாய்க்கிழமை காலை வெளியிட்ட ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளார். அத்துடன் Doly Begum இன் இராஜினாமா கடிதம் கிடைத்ததையும் அவர் உறுதிப்படுத்தினார்.

​கடந்த எட்டு ஆண்டுகளாக Scarborough Southwest தொகுதிவாழ் நல்ல மக்களுக்குப் பிரதிநிதியாக இருந்ததில் எங்கள் கட்சி பெருமிதம் கொள்கிறது. அந்தப் பிரதிநிதித்துவத்தைத் தொடர்ந்து வழங்க நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Begum முதன்முதலில் 2018 ஆம் ஆண்டு Ontario வின் NDP மாகாணசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2022 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளிலும் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அவர் அக்கட்சியின் பொதுப் போக்குவரத்துத் துறைக்கான நிழல் அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article