கனேடிய பெண் ஒருவர், Dark web இல் விற்பதற்காக, விலங்குகளை கொடூரமாகக் காலால் மிதித்துக் கொன்று, அதை வீடியோவாக பதிவு செய்துவந்துள்ளார்.
வின்னிபெகைச் சேர்ந்த ஐரீன் லிமா என்னும் குறித்த பெண்னொருவரே இவ்வாறு செய்துள்ளார்.
ஐரீனுடைய காதலரான சாட் (Chad Kabecz), அந்த வீடியோக்களை Dark webஇல் விற்றுவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாசாருக்கு இந்த விடயம் தொடர்பில் ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விலங்குகள் கொடுமை தொடர்பில் அவர்கள் இருவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில். அவர்களுக்கு பிணையும் மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.