இஸ்ரேல் நேற்று திங்கட்கிழமை (26) காசாவில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 வயது சிறுமி உட்பட 5 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 60 பேர் காயமடைந்ததாக காசாவின் குடிமைப் பாதுகாப்பு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
அல் மவாசியில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருக்கும் ஒரு முகாமை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் 7 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்ததாக காசாவின் குடிமைப் பாதுகாப்பு அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
