9.3 C
Scarborough

சர்வதேச அமைதிப் பாதயாத்திரை இன்றுடன் நிறைவு!

Must read

உலகிற்கு அமைதியின் செய்தியைக் கொண்டு செல்லும் சர்வதேச அமைதிப் பாதயாத்திரையின் இறுதி நாள் இன்றாகும்.

இன்று மதியம் 12 மணியளவில் களனி ரஜமகா விகாரையிலிருந்து ஆரம்பமாகும் இந்த அமைதிப் பேரணி, கொழும்பு சுதந்திர சதுக்கத்தை நோக்கிப் பயணிக்கவுள்ளது.

இன்று மாலை 04.00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் விசேட அரச நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. இதன் போது, பஞ்ஞாக்கர தேரர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிடம், ஜனாதிபதியினால் ஸ்ரீ மகா போதியின் புனித அரசமரக் கன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மாலை 5.30 மணிக்கு சுதந்திர சதுக்கத்திலிருந்து மீண்டும் ஆரம்பமாகும் பாதயாத்திரை, கொழும்பு கங்காராம விகாரையை சென்றடைந்து நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 22ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமான இந்த சர்வதேச அமைதிப் பாதயாத்திரை, நேற்று திங்கட்கிழமை யக்கலையிலிருந்து களனி ரஜமகா விகாரையை வந்தடைந்திருந்தது.

இன்றைய தினம் கொழும்பின் பல வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரநாயக்க சுற்றுவட்டத்திலிருந்து பேஸ்லைன் வீதி ஊடாக பொரளை சந்தி வரை, கங்காராம விகாரையைச் சூழவுள்ள வீதிகள்.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இன்று முற்பகல் 11 மணி முதல் அவ்வப்போது போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article