6.3 C
Scarborough

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Must read

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இன்று சகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. இதன் அதிர்வுகள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளன.

இதனால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளிகளில் தஞ்சமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் அல்லது சொத்துச் சேதங்கள் குறித்த விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள நிலவரங்களை அந்தந்த நாட்டு பாதுகாப்புப் பிரிவினர் கண்காணித்து வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article