மார்ச் 28-ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் (IPL 2026) தொடருக்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) தனது வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்:
மூன்று வீரர்களுக்கு அனுமதி: துஷ்மந்த சமீர, பதும் நிஸ்ஸங்க மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகிய மூவரும் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க ‘NOC’ வழங்கப்பட்டுள்ளது.
மதீஷ பத்திரண அப்டேட்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் ₹18 கோடிக்கு வாங்கப்பட்ட மதீஷ பத்திரண, காயத்தில் இருந்து மீண்டு தற்போது உடற்தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரும் காத்திருப்பு: வனிந்து ஹசரங்க மற்றும் நுவான் துஷார ஆகிய வீரர்கள் தங்களது உடற்தகுதி தேர்வை முடித்த பின்னரே ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதி வழங்கப்படுமென வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் ‘தொடர் நாயகன்’ விருது வென்றதும், அவர் இந்த முறை சிஎஸ்கே (CSK) அணிக்காக விளையாடவுள்ளதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

