நாட்டின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையைக் கருத்திற்கொண்டு, நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 15 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.
இதன்படி கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, கங்க இஹல கோரளை, தொளுவ, யட்டிநுவர ஆகிய பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கேகாலை மாவட்டத்தின் கேகாலை, யட்டியாந்தோட்டை, மாவனல்லை, தெஹியோவிட்ட, அரநாயக்க ஆகிய பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் மாத்தளை மாவட்டத்தின் லக்கல பல்லேகம, அம்பன்கங்க கோரளை, உக்குவளை, வில்கமுவ, இறத்தோட்டை ஆகிய பகுதிகளுக்கும் வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 12 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் அவதானமாக இருக்குமாறு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய பின்வரும் பகுதிகளுக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும்
காலி மாவட்டத்தின் நியகம பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கண்டி மாவட்டத்தின் மெததும்பர, பாததும்பர ஆகிய பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நுவரெலியா மாவட்டம் நில்தண்டாஹின்ன, வலப்பனை, நோவூட், அம்பகமுவ பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல, கலவான, அயகம பகுதிகளுக்கும் இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

