5.5 C
Scarborough

அமெரிக்காவில் 6 நாட்களுக்கு முன் மாயமான பெங்களூரு மாணவர் சடலமாக மீட்பு!

Must read

கர்நாடக தலைநகர் பெங்​களூரு​வைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீநி​வாசையா (22). இவர் அமெரிக்காவில் கலிபோர்​னியா பெர்க்லி பல்​கலைக்​கழகத்​தில் வேதி​யியல் மற்றும் உயி​ரியல் மூலக்​கூறு பொறி​யியல் துறை​யில் முதுகலை ​படிப்பு பயின்று வந்​தார். கடந்த பிப்.9-ம் தேதி முதல் இவரை காணவில்லை.

இந்​நிலை​யில், சாகேத் சடல​மாக மீட்​கப்​பட்​டதை சான் பிரான்​சிஸ்​கோ​வில் உள்ள இந்​தி​யத் தூதரகம் உறுதி செய்​துள்​ளது. இதுகுறித்து இந்​திய தூதரகம் வெளி​யிட்​டுள்ள எக்ஸ் பதி​வில், “மாணவர் சாகேத் உயி​ரிழந்​தது மிகுந்த வருத்​தத்தை அளிக்​கிறது. சாகேத் உடலை இந்​தி​யா​வுக்​குக் கொண்டுவரத் நடவடிக்கைகளை​யும் தூதரகம் மேற்​கொண்டுள்ளது” எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சாகேத் கடைசி​யாக பல்​கலைக்​கழக வளாகத்​திற்கு அரு​கில் காணப்​பட்​டார். அவர் மாய​மானதைத் தொடர்ந்​து, அன்சா ஏரி மற்றும் பெர்க்லி ஹில்ஸ் பகு​தி​களில் தேடிய போது, டில்​டன் பூங்கா அருகே அவரது கடவுச்​சீட்டு, மடிக்​கணினி அடங்​கிய பை கண்​டெடுக்​கப்​பட்​டது.

சென்னை ஐஐடி-​யின் முன்​னாள் மாணவ​ரான சாகேத் படிப்​பில் சிறந்து விளங்​கிய​வர். ‘ஹைப்​பர்​லூப்’ தொழில் ​நுட்​பத்​திற்​கான நுண்​-குளிர்ச்சி அமைப்​பைக் கண்​டு​பிடித்​ததற்​காக காப்​புரிமை பெற்ற ஆறு நபர்​களில் இவரும் ஒரு​வர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article