மலையாள நடிகையான சம்யுக்தா மேனன், தமிழில், ‘களரி’, ‘ஜூலை காற்றில்’ தனுஷின் ‘வாத்தி’படங்களில் நடித்துள்ளார். அவர் ‘சுயம்பு’, ‘ஸ்லம்டாக்’ ஆகிய பான் இந்தியா படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இப்போது ‘த பிளாக் கோல்டு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். யோகேஷ் இயக்கும் இப்படத்தில் நாசர், முரளி சர்மா, ராவ் ரமேஷ், மனிஷ் வாத்வா உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சம்யுக்தாவுக்கு மிரட்டலான ஆக் ஷன் காட்சிகள் உள்ளன.

