16.1 C
Scarborough

மீண்டும் வெளியாகும் விஜய், அஜித், சூர்யா படங்கள்!

Must read

ரஜினியின் பாபா, கமலின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான், விஜய்யின் கில்லி, அஜித்தின் வாலி, தினா உள்பட பல படங்கள் ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் விஜய் நடித்து 2005-ம் ஆண்டு வெளி யான ‘சச்சின்’ படத்தை, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ரீரிலிஸ் செய்தார். கடந்த 18-ம் தேதி வெளியிடப்பட்ட இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இந்தப் படக்குழு சக்சஸ் மீட் நடத்தியது. இதில் தயாரிப்பாளர் தாணு, சச்சின் பட இயக்குநர் ஜான் மகேந்திரன், இசை அமைப்பாளர் தேவி பிரசாத், நடன இயக்குநர் ஷோபி கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கூறும்போது, “விஜய், திருப்பாச்சி, மதுர போன்ற அதிரடி படங்களில் கவனம் செலுத்திய போது, அவரிடம் இயக்குநர் ஜான் மகேந்திரன் பற்றி கூறினேன். அவர் ‘குஷி’ போன்ற கதையை சொன்னார். கேட்கிறீர்களா?’ என்று கேட்டேன். பிறகு ஜான் மகேந்திரனை, விஜய்யிடம் கதை சொல்ல ஏற்பாடு செய்தேன். ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு விஜய்யிடமிருந்து அழைப்பு வந்தது, ‘கண்டிப்பாக பண்ணலாம்’ என்றார்.

2005-ம் ஆண்டு ஏப். 14-ம் தேதி சச்சின் படத்தை வெளியிட்டேன். அனைத்து விநியோகஸ்தர்களும் நல்ல வசூல் சாதனை செய்ததாகக் கூறினார்கள். ‘சச்சின்’ மறுவெளியீட்டிலும் நல்ல வசூல் செய்திருக்கிறது. இதனால் அஜித்தின் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, சூர்யாவின் ‘காக்க காக்க’, விஜய்யின் ‘தெறி’, பாரதிராஜாவின் ‘கிழக்கு சீமையிலே’ ஆகிய படங்களை மறு வெளியீடு செய்ய இருக்கிறேன்” என்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article