15.1 C
Scarborough

ஐ.பி.எல் 2025 – CSK அணியின் போட்டி அட்டவணை அறிவிப்பு

Must read

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் ரி20 தொடரான ஐ.பி.எல் இன் 18 ஆவது சீசன் இந்த வருடம் மார்ச் 22 ஆம் திகதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான முழு போட்டி அட்டவணை இன்று வெளியாகியது. இதன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சம்பியனான கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸை எதிர்கொள்கிறது.

குவாலிபயர் 1 மே 20 ஆம் திகதியும், எலிமினேட்டர் மே 21 ஆம் திகதியும் ஐதராபாத்தில் நடைபெற உள்ளன. குவாலிபயர் 2 மே 23 ஆம் திகதியும் இறுதிப்போட்டி மே 25 ஆம் திகதியும் கல்கத்தாவில் நடைபெற உள்ளன. மொத்தம் 74 ஆட்டங்கள் 13 மைதானங்களில் நடைபெற உள்ளன.

இந்த தொடரில் 5 முறை சம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மார்ச் 23 ஆம் திகதி மோதுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு போட்டி அட்டவணை:-

1. மார்ச் 23: சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ், சென்னை

2. மார்ச் 28: சென்னை சூப்பர் கிங்ஸ் – ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை

3. மார்ச் 30: ராஜஸ்தான் ரோயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ், கவுகாத்தி

4. ஏப்ரல் 5: சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கெப்பிடல்ஸ், சென்னை

5. ஏப்ரல் 8: பஞ்சாப் கிங்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ், சண்டிகர்

6. ஏப்ரல் 11: சென்னை சூப்பர் கிங்ஸ் – கல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை

7. ஏப்ரல் 14: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ

8. ஏப்ரல் 20: மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை

9. ஏப்ரல் 25: சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை

10. ஏப்ரல் 30 சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ், சென்னை

11. மே 3: ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர்

12. மே 7: கல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ், கல்கத்தா

13. மே 12: சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை

14. மே 18: குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ், அகமதாபாத்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article