8.7 C
Scarborough

இன்றைய ராசி பலன்கள் – ஜனவரி 4 – 2025 சனிக்கிழமை

Must read

  • குரோதி வருடம் மார்கழி மாதம் 10 ஆம் தேதி சனிக்கிழமை 04.01.2025
  • சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.
  • இன்று அதிகாலை 01.09 வரை சதுர்த்தி. பின்னர் இரவு 11.16 வரை பஞ்சமி. பின்பு சஷ்டி.
  • இன்று அதிகாலை 12.04 வரை அவிட்டம். பின்னர் இரவு 10.51 வரை சதயம். பின்பு பூரட்டாதி.
  • பூசம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.
  • சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

எதிர்பார்த்த வேலை ஒப்பந்தங்கள் கிடைத்து எதிர்பாராத லாபம் பெறுவீர்கள். நண்பர்களுக்கு உதவி செய்து நன்மதிப்பை அடைவீர்கள். சிக்கலான விஷயங்களை பெண்கள் மூலமாக தீர்த்து வைப்பீர்கள். விற்பனையில் கிடைத்த பணத்தை தொழிலில் முதலீடு செய்வீர்கள்‌. உத்தியோகத்தில் மிகவும் உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 9 7 6 1

ரிஷபம்

கணிசமான லாபத்தை ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் அடைவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல பலனை காண்பீர்கள். நண்பர்கள் மூலமாக புதிய தொழில் தொடங்குவீர்கள். வெளிநாட்டுப் பயணங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். சுவாசப் பிரச்சனையை தீர்க்க எக்ஸ்ரே எடுப்பீர்கள். காதலிக்கும் பெண்ணிடம் முக்கிய உதவி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 6 1 2 9

மிதுனம்

என்றோ செய்த நல்ல காரியத்திற்கான பலனை இன்று அறுவடை செய்வீர்கள். குடும்பத்திற்குள் இருந்த குழப்பத்தை நீக்கி குதூகலத்தை ஏற்படுத்துவீர்கள். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். கவனக்குறைவாக வேலை செய்தால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவீர்கள். ஆன்மிகப் பெரியோர்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்: 5 9 4 3

கடகம்

வாகனங்களில் செல்லும்போது செல்போன் பேசாதீர்கள். வளைவுகளில் திரும்புகின்ற பொழுது மிகவும் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் விபத்து ஏற்பட்டு காயம் அடைவீர்கள். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். சிறியோர்களின் பழக்கத்தினால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். கடுமையாக முயற்சி செய்து கடனை அடைக்க நினைப்பீர்கள். சந்திராஷ்டம நாள். நிதானம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 2 3 8 5

சிம்மம்

காதலி உங்கள் கருத்துக்கு எதிராக நடப்பதால் கவலைப்படுவீர்கள். புதிய வாகனம் வாங்கி பெருமைப்படுவீர்கள். வியாபாரிகள் பொருளாதார முன்னேற்றம் பெறுவீர்கள். கட்டிடத் தொழிலில் எலக்ட்ரீசியன்கள் தொடர்ந்து வேலை பார்ப்பீர்கள். எதிர்கால நலனுக்காக நிலத்தில் முதலீடு செய்வீர்கள். பெண்களின் சேமிப்பை தக்க சமயத்தில் பயன்படுத்தி கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை.
அதிர்ஷ்ட எண்: 1 7 6

கன்னி

நீண்ட தூரப் பயணத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய மறக்காதீர்கள். ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து போகாதீர்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். மாமியார் மருமகள் சண்டையால் மன நிம்மதியை இழப்பீர்கள். வேலை காரணமாக குடும்பத்தைப் பிரிந்து செல்வீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 5 1 2 9

துலாம்

மனதில் உள்ளதை வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பீர்கள். தொழிலுக்கான பணத்தைப் புரட்ட சிரமப்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்காமல் தடுமாறுவீர்கள். அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். நெருக்கமான உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவீர்கள். பேசும் வார்த்தையில் கோபத்தைக் கலக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு ,பச்சை.
அதிர்ஷ்ட எண்: 6 9 4 3

விருச்சிகம்

கூட்டாகச் செய்யும் தொழிலில் கொள்ளை லாபம் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி அடைவீர்கள். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்ல பலனை அடைவீர்கள். தொழிலை நிலைநிறுத்த பாடுபடுவீர்கள்‌. நினைத்தது நிறைவேற நண்பர்களின் உதவி பெறுவீர்கள். மனைவி உங்களைப் புரிந்து கொண்டு நடப்பதால் மன நிம்மதி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்.
அதிர்ஷ்ட எண்: 9 3 8 5

தனுசு

நண்பரின் பிரச்சினையைத் தீர்க்க காவல் நிலையம் செல்வீர்கள். வியாபாரத்தைப் பெருக்க இரவு பகலாக உழைப்பீர்கள். தொழிலாளர் பற்றாக்குறையால் வேலையில் சுணக்கம் காண்பீர்கள். மேலதிகாரிகள் குறை சொல்லாத அளவிற்கு பணியில் கவனமாக இருப்பீர்கள். அடுத்தவரின் பேச்சைக் கேட்டு உங்கள் வேலையைக் கோட்டை விடாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு.
அதிஷ்ட எண்: 3 7 6 1

மகரம்

வாக்குத் திறமையைக் காட்டி வேலைவாய்ப்பைப் பெறுவீர்கள். மருத்துவர்கள், பொறியியலாளர்கள் சாதனை படைப்பீர்கள். பொருளாதாரச் சரிவால் உறவினர்கள் மத்தியில் மரியாதை குறைவை சந்திப்பீர்கள். . கேட்ட இடத்தில் பண உதவி பெறுவீர்கள். வேலைப்பளு குறைந்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 8 1 2 9

கும்பம்

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற குட்டிக்கரணம் அடிப்பீர்கள். அதையும் தாண்டி அவமானங்களையும் சந்திப்பீர்கள். வேலை விஷயமாக அலைச்சலால் பாதிக்கப்படுவீர்கள். கண்ட இடத்தில் சாப்பிடாதீர்கள். ஜீரணக் கோளாறு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். எடுத்த காரியம் உடனே நடக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். வாகனக் கடனை அடைக்க முயற்சி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 8 9 4 3

மீனம்

ஞாபக மறதியால் நல்ல வாய்ப்பை கோட்டை விடுவீர்கள். அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தால் பிரச்சனையில் மாட்டிக் கொள்ள மாட்டீர்கள். வியாபாரத்தில் ஏற்ற நிலையை காண்பீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் அடைந்து மன நிம்மதியை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 3 8 5

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article