15.1 C
Scarborough

தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விசேட வர்த்தமானி வெளியீடு – தேர்தல்கள் ஆணைக்குழு

Must read

தேசிய மக்கள் சக்தி மற்றும் சர்வஜன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை உறுதிப்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 99(அ) ஆம் உறுப்புரையின் கீழ் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக பிமல் ரத்நாயக்க, அனுர கருணாதிலக்க, உபாலி பன்னிலகே, எரங்க உதேஸ் வீரரத்ன, அருண ஜயசேகர, ஹர்ஷண சூரியபெரும, ஜனித் ருவன் கொடித்துவக்கு, புண்ணிய ஸ்ரீ குமார ஜயகொடி, ராமலிங்கம் சந்திரசேகர், நஜீத் இந்திக்க, சுகத் திலகரத்ன, லக்மாலி காஞ்சனா ஹேமசந்திர, சுனில் சமிந்த குமார, காமினி ரத்நாயக்க, ருவன் சமிந்த ரணசிங்க, சுகத் வசந்த த சில்வா, அபூபக்கர் ஆதம்பாவா, ரத்நாயக்க சமரசிங்க ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சர்வஜன சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக திலித் ஜயவீர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

  • இராஜதுரை ஹஷான்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article