3.9 C
Scarborough

3 சிறுவர்களுக்கு எதிராக 200 குற்றச்சாட்டுகள் பதிவு!

Must read

கனடாவின் மிஸிஸிசாகா நகரில் மூன்று மாத காலப்பகுதியில் பல்வேறு வணிக வளாகங்களில் இடம்பெற்ற கடை உடைப்பு மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக மூன்று சிறுவர்களுக்கு எதிராக சுமார் 200 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2025 நவம்பர் முதல் 2026 ஜனவரி வரை நகரம் முழுவதும் 35-க்கும் மேற்பட்ட கடைஉடைப்பு சம்பவங்கள் குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து சம்பவங்களிலும் 2007 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வெள்ளி நிற ஆகுரா ஆர்டிஎக்ஸ் மற்றும் 2009 ஹையுண்டா எலாட்ரா உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“Project Toretto” எனப்படும் விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக, பெப்ரவரி 10ஆம் திகதி மிசிசாகாவில் உள்ள மூன்று வீடுகளிலும் ஒரு வாகனத்திலும் நான்கு தேடுதல் உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டன.

இதன் போது இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 50,000 டாலருக்கு மேற்பட்ட மதிப்புள்ள திருடப்பட்ட பொருட்கள் — ஜாக்கெட்டுகள், காலணிகள், வாசனைத் திரவியங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் மீட்கப்பட்டன.

மூன்றாவது சிறுவனை பொலிஸார் இதுவரையில் கைது செய்யவில்லை எனவும் பொலிஸார் தேடுதல் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article