9.7 C
Scarborough

வருடம் முழுதும் வாடகை தராத பெண் – வௌியேற்ற உத்தரவிட்டது குடியிருப்பாளர் சபை!

Must read

கனடாவின் பிராம்ப்டன் (Brampton) பகுதியில் வசிக்கும் ராமன்பிரீத் சிங் (Ramanpreet Singh) என்ற வீட்டு உரிமையாளர், தனது குடியிருப்பாளர் வாடகை தராததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

2025 ஏப்ரல் மாதம் இவரது வீட்டில் குடியேறிய ஒரு பெண், முதல் மற்றும் கடைசி மாத வாடகையைத் தவிர, கடந்த ஒரு வருடமாக எவ்விதப் பணமும் செலுத்தவில்லை எனபதால் அவர் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அதன்படி, உரிமையாளருக்கு குறித்த பெண் சுமார் $23,000 டாலர் வாடகை மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்களை நிலுவையில் வைத்துள்ளார்.

இதனால் தனது குடும்பச் செலவுகள் மற்றும் வங்கிக் கடனை அடைக்க முடியாமல் தவித்து வருதாக உரிமையாளர் கூறுகிறார்

இதே பெண் இதற்கு முன் 2023-ல் டவுன்டவுன் டொராண்டோவில் (Downtown Toronto) டிம் ரை (Tim Rye) என்பவரின் வீட்டில் தங்கியிருந்தபோது, $59,000 டாலர் வாடகை நிலுவை வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அப்போது அவர் (Content Creator) எனக் கூறி ஏமாற்றியுள்ளார்.

ஒன்டாரியோவின் காணி உரிமையாளர் மற்றும் குடியிருப்பாளர் சபை (LTB) இந்தப் பெண்ணிற்கு எதிராக வெளியேற்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஏப்ரல் 9-ம் தேதி இதற்கான விசாரணை நடைபெறவுள்ளது.

புதிய வீட்டு உரிமையாளர், குடியிருப்பாளர்களைத் தேர்வு செய்யும் முன் ‘Openroom’ அல்லது ‘CanLII’ போன்ற தளங்கள் மூலம் அவர்களின் பின்னணியைச் சரிபார்க்குமாறு சட்ட நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்த கசப்பான அனுபவத்தால், தனது வீட்டை விற்க முடிவெடுத்துள்ளதாக ராமன்பிரீத் சிங் கவலை தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article