15.3 C
Scarborough

முதன்முறையாக சந்தித்த பிரதமர் Mark Carney மற்றும் Montreal நகர முதல்வர்.

Must read

பொது போக்குவரத்து மற்றும் வீட்டுவசதி உள்ளிட்ட முன்னுரிமைகளில் தானும் பிரதமர் Mark Carney இணைந்திருப்பதாக Montreal நகர முதல்வர் Valérie Plante கூறுகிறார்.

April மாதம் Carney பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக Plante மற்றும் Carney ஆகியோர் Montreal நகர மண்டபத்தில் சந்தித்தனர். சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் கருத்துரைத்த Montreal நகர முதல்வர், இருவரும் பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்தி வலுவான உறவை உருவாக்கியுள்ளதாக கூறினார்.

ஆனால் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க பிரதமர் மறுத்துவிட்டார். தொடர்ந்து Quebec இல் தங்கியிருக்கும் அவர், அங்கு வணிகத் தலைவர்கள் மற்றும் Quebec மாகாண முதல்வர் François Legault இனையும் சந்திக்க உள்ளார்.

கனடா சமூகக் கட்டுமான நிதியின் மூலம் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக Quebec இந்த ஆண்டு $557.5 மில்லியனைப் பெறும் என்றும் அதில் Montreal க்கு கிட்டத்தட்ட $84 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதிப்படுத்துகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article