June மாதத்திற்குப் பின்னர் முதல் முறையாக இலையுதிர் கால அமர்விற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் நாடாளுமன்றம் திரும்பியபோது, திங்கட்கிழமை கேள்வி நேரத்தின் போது பிரதமர் Mark Carney மற்றும் Conservative தலைவர் Pierre Poilievre இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.
தனது தொடக்க உரையில் பிரதமர் Poilievre ஐ மீண்டும் சபைக்கு வரவேற்றார். அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே இருவரும் சூடான விவாதத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் NDP தலைவர் Tom Mulcair, பிரதமர் Mark Carney சில முறை அதிர்ச்சியடைந்ததாகவும், கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, குறிப்பாக பதில்களை வழங்கும் போது தடுமாறியதாகவும் கூறினார், Poilievre உம் கடந்த காலத்தில் நடந்து கொண்ட விதத்தை வைத்து நோக்கும் போது முதல் நாளில் அவர் தயங்குவது போல் தோன்றியதாகவும் Mulcair குறிப்பிட்டார்.
Alta வின் Lethbridge ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் Conservative நாடாளுமன்ற உறுப்பினரான Rachael Thomas பேச்சு சுதந்திரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதித்ததை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மறைந்த பழமைவாத செல்வாக்காளரான Charlie Kirk இற்கு எழுந்து நின்று கைதட்டினர்.
Carney தனது தொடக்க உரையில் Poilievre ஐ சுட்டிக்காட்டி அவர் கடைசியாக இங்கு வந்ததிலிருந்து சில விடயங்கள் மாறியிருப்பதை கவனிக்கலாம் என்று கூறினார். கடந்த June மாதம் அவையில் ஒரு ஒத்துழைப்பு உணர்வு மற்றும் நான்கு வார அமர்வின் போது நிறைவேற்றப்பட்ட சட்டங்களையும் சுட்டிக்காட்டினார்.
Conservative தலைவர், பிரதமர் மீது வாக்குறுதிகளை மீறுதல், சாக்குப்போக்குகள் கூறுதல், செலவுகள், குற்றம் மற்றும் குழப்பம் ஆகியவற்றுடன் பெரும் பற்றாக்குறையை ஏற்படுத்துதல் என்று விரைவாக குற்றம் சாட்ட ஆரம்பித்ததை தொடர்ந்து இருவருக்குமிடையே காரசாரமான வாதம் தொடங்கியது.