மிசிசாகா (Mississauga) பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான மெரிடித் (Meredith), ஒரு வணிக வளாகத்தில் இலவச தோல் பராமரிப்பு பரிசோதனைக்குச் சென்றபோது, அவரது ஒப்புதல் இன்றி முகத்தில் ‘ரெட்-லைட் தெரபி’ (Red-light therapy) கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது.
அந்த பரிசோதனைக்குச் $1,400 முன்பணம் செலுத்த அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவர் The Soap Tree நிறுவனத்துடன் 25% வட்டி விகிதத்தில் $10,000 கடனுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.
அதன்படி முன்பணத்தையும் சேர்த்து மொத்தம் $14,000 செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சியடைந்த மாணவி, பொருளைத் திருப்பிக் கொடுக்கச் சென்றபோது அந்த நிறுவனம் கடையை மூடிவிட்டுச் சென்றிருந்தது.
இருப்பினும் ஒன்றாரியோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, சில்லறை விற்பனைக் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு ‘கூலிங்-ஆஃப்’ (Cooling-off) காலம் கிடையாது.
எனினும், LendCare நிறுவனத்தின் தாய் நிறுவனமான goeasy, குறித்த மாணவியின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவரது கடனை முழுமையாக ரத்து செய்துள்ளதுடன், கட்டணங்களையும் திருப்பி அளித்துள்ளது.
ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் நல்ல எடுத்துக்காட்டாகும்!

